ETV Bharat / state

ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர்களில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்! - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி: தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் மற்றும் குமரி மாவட்ட ஓவியர்கள் சார்பில், கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சுற்றுச்சுவர்களில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்று சுவர்களில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

author img

By

Published : May 3, 2020, 4:14 PM IST

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. குமரியில் மொத்தம் 16 பேர் கரோனா நோயால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 5 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் கரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணமாக, அவர்கள் 144 தடை உத்தரவை மீறி, வீதிகளில் உலா வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் மத்தியில் கரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, குமரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் கரோனா பாதிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச் சுவர்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள்

அந்த வகையில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் மற்றும் குமரி மாவட்ட ஓவியர்கள் ஒன்றிணைந்து, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்று சுவர்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

புதுக்கோட்டையில் கரோனாவை அழிக்கும் ராக்கெட் ஓவியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.