ETV Bharat / state

‘நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ - சமையல் கலைஞர்கள் சங்கம்! - சமையல் கலைஞர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி: கரோனா காலத்தில் நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதிலும் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளதாக சமையல் கலைஞர்கள் மற்றும் தொழிளார்கள் முன்னேற்ற சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமையல் கலைஞர்கள் சங்கம்
சமையல் கலைஞர்கள் சங்கம்
author img

By

Published : Dec 22, 2020, 3:38 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (டிச.22) சமையல் கலைஞர்கள் மற்றும் தொழிளார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கூட்டம் நடைப்பெற்றது.

கரோனா காலத்தில் அவதிபட்ட கலைஞர்கள்:

இதில் சென்னை, திருச்சி, மதுரை என தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சமையல் கலைஞர்கள் மற்றும் தொழிளார்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது, “கரோனா ஊரடங்கு காலத்தில் ஒன்பது மாதங்களாக தொழில் இழந்து, எந்த வித வருமானமுமின்றி தமிழ்நாடு முழுவதிலுமுள்ள பத்து லட்சம் சமையல் கலைஞர்கள், தொழிளார்கள் அவதிப்பட்டு வந்தனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை:

இவர்களுக்கு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்னும் எங்களது கோரிக்கையை அரசு அலுவலர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை.

எங்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி; பொதுமக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.