ETV Bharat / state

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் புகைப்படக் கலைஞர் தர்ணா! - Kanniyakumari

கன்னியாகுமரி: பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் புகைப்படக் கலைஞர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புகைப்படக் கலைஞர்
author img

By

Published : Apr 26, 2019, 5:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு புகைப்படம் எடுத்து கொடுக்கும் பணிக்காக 3 வருடத்திற்கான உரிமையை பெற்றுள்ளார். இதற்காக 2,45,000 ரூபாயும் இவர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் இன்று குடும்பத்துடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்குள் நுழைந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் உதவி ஆய்வாளர் ஆதாம் அலி, சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், ‘வருடத்தில் சில நாட்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. கடந்த 5 மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கப்பட்டது. சிறிய கடல் சீற்றம் மற்றும் அலை அடித்தாலே அதனைக் காரணம் காட்டி படகு போக்குவரத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் எனக்கு வருமானமே கிடைப்பதில்லை. இந்தத் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று நம்பி எனது மகள்களை கடன் வாங்கி பொறியியல் படிப்பு படிக்கவைத்து வருகிறேன். தற்போது கடனை அடைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. நான் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியே தெரியவில்லை. தற்போதும் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் படகு போக்குவரத்தை நிறுத்திவிட்டனர்’ எனக் கண்ணீர் மல்க கூறினார்.

பின்னர் இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஆதாம் அலி, நாளை காலை சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் சுரேஷையும் காவல்நிலையம் வருமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து புகைப்படக்கலைஞர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

TN_KNK_01_26_FAMILY_THARNAA_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் புகைப்படம் எடுக்கும் ஒப்பந்த புகைப்படக்காரர் தனது குடும்பத்துடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு புகைப்படம் எடுத்து உடனடியாக புகைப்படம் கொடுக்கும் பணிக்கான 3 வருடத்திற்கான உரிமையை பெற்றுள்ளார். இவர் திடீரென இன்று தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தர்ணா போராட்டத்தை கைவிடும்படி சுரேஷிடம் கூறினார். அப்போது நான் திருவள்ளுவர் சிலை பாறையில் புகைப்படம் எடுத்து சுற்றுலாப்பயணிகளுக்கு கொடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு 245000 ரூபாய் கொடுத்துள்ளேன். ஆனால் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. கடந்த 5 மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கப்பட்டது. சிறிய கடல் சீற்றம் மற்றும் அலை அடித்தாலே அதனை காரணம் காட்டி படகு போக்குவரத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் எனக்கு வருமானமே கிடைப்பதில்லை. இந்த தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று நம்பி எனது மகள்களை கடன் வாங்கி பொறியியல் படிப்பு படிக்கவைத்து வருகிறேன்.தற்போது கடனை அடைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. கடன்காரர்கள் வந்து தற்போது என்னை நெருக்கி வருகின்றனர். என்னால் கடனை அடைக்க முடியவில்லை. நான் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியே தெரியவில்லை. தற்போதும் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் படகு போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். இதனால் என்னிடம் வாங்கிய பணத்திற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பதில் சொல்லி ஆகவேண்டும் இல்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்றார். இதனை கேட்டறிந்த எஸ்ஐ இதுபற்றி பூம்புகார் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் நாளை காலை சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் சுரேஷையும் காவல்நிலையம் வருமாறு கேட்டுக்கொண்டார். அங்கு வைத்து ஒரு தீர்வை ஏற்படுத்தி தருவதாக சுரேஷிடம் கூறியதையடுத்து சுரேஷ் தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விஷுவல்: தர்ணா போராட்டம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.