ETV Bharat / state

விஜயதாரணியை எதிர்த்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வேட்பு மனுத்தாக்கல் - காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ்

கன்னியாகுமரி : காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியை எதிர்த்து, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் சுயேச்சையாக போட்டியிட நேற்று (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

விஜயதாரணியை எதிர்த்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் வேட்பு மனுத்தாக்கல்

author img

By

Published : Mar 20, 2021, 8:55 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விஜயதாரணிக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுத்தது. இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ், சுயேச்சையாக போட்டியிட விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் பேசுகையில், “ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் மாநில கமிட்டி இல்லை. கேஎஸ் அழகிரி, வேணுகோபால், மணிசங்கர் அய்யர் ஆகியோர் இடைதரகர்கள் போல் செயல்பட்டு பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளனர்.

விஜயதாரணி எம்எல்ஏ வெற்றி பெற்றால், தன்னுடன் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏகளையும் பேரம் பேசி பாஜகவிற்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி அடியோடு அழிந்து போகும் நிலை உருவாகும்” என்றார்.

இதையும் படிங்க : அதிமுகவை கலாய்த்த கமல் முதல் உதயநிதியின் சேம் டயலாக் வரை: இன்றையத் தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.