கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தலைமையில் மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 23) மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையில், கரோனா தடை உத்தரவு காரணமாக ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 630 மீனவர்கள் ஜூன் 25ஆம் தேதி ஈரானிலிருந்து புறப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சில அலுவலர்கள் தலையிட்டு இவ்வாறு புறப்பட்டுவரும் மீனவர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர் நீக்கிவிட்டு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
எனவே அதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையிலிருந்து திருவனந்தபுரத்திற்குப் பணிக்குச் செல்பவர்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்.
மண்டபங்களில் திருமண நடத்த அனுமதித்து கரோனா பரவ காரணமாக இருக்கக் கூடாது, இதனை அலுவலர்கள் தடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.