கன்னியாகுமரி: நாகர்கோவிலில் எஸ்டிபிஐ-வின் தேசிய மனித உரிமை கூட்டமைப்பு சார்பாக உலக சித்திரவதை தினத்திற்கு எதிரான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ஐநா சபையில் சித்தரவதை என்பது மனித உரிமை மீறல் என்றும் அது ஒரு கொடூரமான செயல் என்பதை கூறி அந்த உடன்படிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் கையழுத்து போட்டுள்ளார்கள். இந்தியாவும் கையெழுத்து போட்டும் இந்திய உள்நாட்டு சட்டத்தில் அதை ஒரு குற்றம் என்ற நிலையில் சட்டரீதியாக சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் மனு கொடுக்க சென்ற மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை ஒன்றிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு இல்லாத ஒரு அறிக்கையாக சமர்ப்பித்தது உண்மைக்கு புறம்பானது.
சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்ட ஒருவரை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்தும் கூட கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்தில் இறந்த அஜீத் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற படவில்லை என இது தேசிய மனித உரிமை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: 'திமுகவைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் டம்மி தான்' - பிரேமலதா விஜயகாந்த்