கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில், கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை காண்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என, அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று (அக்.03) அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையும் அரசு மதுபானக் கடைகளின் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த உத்தரவினை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவு, கன்னியாகுமரி மாவட்ட மதுப்பிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பழச்சாறு என நினைத்து மது அருந்திய சிறுவன்... குற்ற உணர்ச்சியில் மயங்கிய தாத்தா... அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!