கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, நாகர்கோவிலில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்ட தெருக்கள், பகுதிகளைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாகர்கோவில் மாநகரின் முக்கிய பகுதிகளான வடிவீஸ்வரம், செந்தூரன் நகர், டிவிடி காலனி ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரிப்பதால், அங்குத் தடுப்பு வேலிகளை அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பாதிப்பிற்குள்ளானவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.