கன்னியாகுமரி : மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிஐடியு தொழிற்சங்க 15 வது மாநில மாநாடு நாகர்கோவிலில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் கொடி சமர்ப்பித்தல், தியாகிகளுக்கு அஞ்சலி, மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்மாநில தலைவராக அ.சவுந்தரராசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தியது சென்னை நகரங்களில் தண்ணீர் கட்டணம் பல மடங்காக உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சொத்துவரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4000 ரூபாய் வரி கட்டியவர்கள் 27 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டிய நிலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவு நாளான நேற்று சிஐடியு தொழிற்சங்க பேரணி நடைபெற்றது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கிய பேரணி கிருஷ்ணன்கோவில், வடசேரி வழியாக நாகராஜா திடலில் வந்து அடைந்து பொது கூட்டத்துடன் மாநில மாநாடு நிறைவு பெற்றது.
இதையும் படிங்க : ‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல் ஹாசன்