தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம். இங்கு, வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தக் கடைகளில், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், மின் நட்சத்திரங்கள், மரங்கள், மணிகள், குடில்கள் அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கின்றன. மேலும், கடைகளில் மின் அலங்காரம், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், மரங்கள் போன்றவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இரவு நேரங்களில் காணுமிடமெல்லாம் நட்சத்திரங்களின் கண்கவர் காட்சிகள் பார்ப்போரை கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்!