ETV Bharat / state

விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்: 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்! - Kanyakumari news

திரிபுரா மாநிலத்தில் பணி செய்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வாகன விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்:
விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்
author img

By

Published : Jan 9, 2023, 8:03 PM IST

விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்: 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள இறைச்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர், சதீஷ் (35), இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் பணியில் சேர்ந்தார். 15 ஆண்டுகளாக பல மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் பணியாற்றி வந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

அம்பாசா என்ற இடத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க மலைப் பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சதீஷ் மற்றும் வாகன ஓட்டுநர் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சதீஷ் இறந்த விவரம், அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று சதீஷ் உடல் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இன்று அங்கிருந்து கன்னியாகுமரி ஜமான் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அவரது உடலை ஊர்வலமாக சொந்த ஊரான இறைச்சகுளம் கொண்டு வந்தனர். அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை, தேவாலயத்தில் திருப்பலி நடத்திய பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'தமிழ்நாடு' என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது: வைகோ ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.