ETV Bharat / state

அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை - வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கிய பாஜகவினர்! - En Mann En Makkal padayatra schedule

ஊழலுக்கு எதிராக 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரையில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்பதற்காக, பாஜக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

kanyakumari
அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை
author img

By

Published : Aug 14, 2023, 12:03 PM IST

அண்ணாமலையின் யாத்திரையில் கலந்து கொள்ள வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் பாஜக

கன்னியாகுமரி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் 'என் மண்.. என் மக்கள்' என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை முதலில் தனது நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் தொடங்கினார். அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்திற்கு வந்து, பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

சுமார் 6 மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 225 ஊர்களில் உள்ள பொதுமக்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு, இறுதியில் சென்னையில் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பாதயாத்திரையை நிறைவு செய்கிறார் அண்ணாமலை.

இந்நிலையில் தனது நடைப்பயணத்தை தொடர அண்ணாமலை இன்று (14 ஆம் தேதி) இரவு கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 3 நாட்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். மேலும், நாளை (ஆக.15) காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களியக்காவிளை பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கும் அவர், அன்று மதியம் குழித்துறை பகுதியில் சிறப்புரை ஆற்றுகிறார்.

பின்னர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெட்டுமணி பகுதியில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கும் அண்ணாமலை, எறுதூர்கடை பகுதியில் சிறப்புரை ஆற்றுகிறார். அதைத் தொடர்ந்து, 16 ஆம் தேதி ஓய்வு என அறிவிக்கப்பட்டு உள்ளது. மறுநாள் 17 ஆம் தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு, மணலி சந்திப்பு பகுதியில் சிறப்புரை ஆற்றுகிறார்.

மீண்டும் மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுகுறி பகுதியில் சிறப்புரை நிகழ்த்துகிறார். பின் 18 ஆம் தேதி காலை நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். பின்பு டெரிக் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலைக்கு வந்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கும் அண்ணாமலை, பழத்தோட்டம் வழியாக கொட்டாரம் பகுதிக்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் அண்ணாமலை சிறப்புரை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பாஜக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த நடைப்பயணத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். தற்போது அண்ணாமலை வருகை தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளதால், குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாஜக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

மேலும் அண்ணாமலை சிறப்புரை நிகழ்ந்த உள்ள 6 இடங்களையும் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில், நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அண்ணாமலை பேச உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நாகர்கோவில் நகர பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர் காந்தி மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில், ஏராளமான கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அண்ணாமலையின் பாதயாத்திரையில் பெருந்திரளாக பொதுமக்கள் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நந்திவர்மனுக்கு சிறப்பு அபிஷேகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.