கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து, உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கை போன்றவற்றின் மூலம் அவைகளின் இனவிருத்தி, எச்சங்கள் மூலம் மர கன்றுகளின் விதைகள் பரவல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று(பிப்.17) கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், சுசீந்திரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் பறவை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் தன்னார்வலர்கள், வனத்துறையினர், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:
காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!