கோட்டார் அடுத்த வைத்தியநாதபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடப்பட்டது. ராஜா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், சிறுவர்கள் சிலர் பெட்ரோல் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து, ராஜா கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் ஊரடங்கு காலத்தில் இரவு நேரங்களில் பெட்ரோல் திருடி வெளியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
தற்போது, சிறுவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: எந்தக் கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் என் கடமை' அதிமுக முன்னாள் அமைச்சர்!