ETV Bharat / state

பாலத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி

கன்னியாகுமரி: இரு சக்கர வாகனத்தில் வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவா என்ற பரமசிவம்
author img

By

Published : Jul 28, 2019, 11:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த ஸ்ரீ லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன், இவரது மகன் சிவா என்ற பரமசிவன் (20), அதே ஊரைச் சேர்ந்த வின்சென்ட் மகன் வினிஸ்ராஜ்(20) இருவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் இன்று பைக்கில் கன்னியாகுமரி சென்று சுற்றிப் பார்த்துவிட்டு நான்கு வழி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது நான்கு வழிச்சாலையில் பைக்கை வினிஸ்ராஜ் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.

பாலத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி

அப்போது தீடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு வேலியில் பைக் மோதியது. இதில் இருவரும் 25 அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். சிவா என்ற பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய வினிஸ்ராஜை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி காவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி அருகே நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து பாலிடெக்னிக் மாணவன் பலி ஒருவர் படுகாயம்.

Body:கன்னியாகுமரி அருகே நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து பாலிடெக்னிக் மாணவன் பலி ஒருவர் படுகாயம்.

கன்யாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த ஸ்ரீ லட்சுமி புரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் சிவா என்ற பரமசிவன் வயது 20. அதே ஊரை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் வினிஸ்ராஜ் வயது 20. இருவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். மேலும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்கள். இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்து சுற்றிப்பார்த்துவிட்டு சென்றவர்கள் நான்கு வழி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை வினிஸ்ராஜ் ஓட்டி உள்ளார். நான்கு வழிச்சாலை மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து நரி குளம் பாலம் தாண்டியவுடன் அதிவேகமாக சென்ற பைக் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு வேலியில் மோதியது. இதில் பைக் சுமார் 25 அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலைசிதைந்த நிலையில் சிவா என்ற பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த உயிருக்கு போராடிய வினிஸ்ராஜை மீட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் உயிருக்கு போராடிய நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்து நேரில் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.