ETV Bharat / state

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 12 உள்ளூர் விடுமுறை - kanniyakumari Bhagavathi amman temple masi

கன்னியாகுமரி: அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

kovil
author img

By

Published : Mar 8, 2019, 12:05 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அமைந்துள்ள மிகவும் பிரசித்தப் பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இக்கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தப்பெற்றது.

இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் மாசி கொடைவிழாவில் திருவிளக்கு பூஜைகள், அத்தாழ பூஜைகள், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜை, அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வருதல், உச்சிகால பூஜை, வலியப்படுக்கை, பெரிய தீ வெட்டி அலங்கார பவனி உள்ளிட்ட பல்வேறு பூஜை நிகழ்ச்சிகள் ஒன்பது நாட்களும் நடைபெறும். 10ஆம் நாளில் கொடை விழா நடைபெறுவது வழக்கம்.

மேலும், இந்தக் கோயிலை பெண்களின் சபரிமலை எனவும் அழைப்பர். இந்தக் கோயிலின் இந்தாண்டு மாசிக் கொடை விழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குமரி மட்டுமல்லாது கேரளாவிலிருந்தும் ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் 10ஆம் நாள் திருவிழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு .வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி மார்ச் 12ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Intro:கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 12ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Body:கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 12ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இது குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் மேலும் இந்த கோவிலை பெண்களின் சபரிமலை எனவும் அழைக்கப்படுவர் இந்த கோவிலின் மாசி கொடை விழா கடந்த வாரம் மார்ச் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இந்நிகழ்ச்சியில் மத்திய மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர் இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10ஆம் நாள் திருவிழா வருகிற 12-ஆம் தேதி நடைபெறுகிறது இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு .வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கோடை விழாவையொட்டி வருகிற 12-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். (குறிப்பு: மார்ச் மூன்றாம் தேதி மண்டைக்காடு கோவில் கொடியேற்ற திருவிழா விசுவல் பயன்படுத்திக் கொள்ளவும்ன

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.