இந்தியாவில் கரோனா நோய்க் கிருமியின் தாக்கத்தை எதிர்கொள்ள ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சுற்றித் திரிபவர்களைக் காவல் துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.
இத்தருணத்தில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியாக வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரித்ததன்பேரின், அந்நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த சுசில் சந்திரா என்பதும், அங்குள்ள கல்வி நிறுவனத்திற்கு மாணவர் சேர்க்கை தொடர்பாகச் சென்னை வந்த அவர், அங்கிருந்து பெங்களூரு, கேரளா சென்று பின்னர் களியக்காவிளை வழியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கரோனா திரும்பிச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது - விஞ்ஞானி மைக்கேல் லெவிட்!
உடனே அவரைக் காவல் துறையினர் வாகனத்தில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவர் ரத்த மாதிரியை சோதனைக்குள்படுத்திய பிறகே, இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா, இல்லையா? என்பது தெரியவரும் எனக் காவல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.