கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கரோனா விதிமுறைகளால் காய்கறிச் சந்தைகளில் வாழை இலை, வாழைத்தார்கள், காய்கறிகள் விற்பனையில் கடுமையான சரிவு ஏற்பட்டு உள்ளது. விற்பனை முடங்கியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
கோடையில் கோயில் விழாக்கள், திருமண நிகழ்வுகளை முன்னிட்டு வாழை இலை, வாழைதார்கள், காய்கறிகள் போன்றவற்றின் விற்பனை சிறப்பாக இறக்கும். ஆனால், தற்போது கரோனா கட்டுப்பாடுகளால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு முன்வந்து சிறப்பு சலுகைகள் செய்து விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: அஜித்தை வீடியோ எடுத்த பெண் தற்கொலை முயற்சி