ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு - விவேகானந்தர் நினைவுமண்டபம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

author img

By

Published : Dec 6, 2022, 8:11 AM IST

கன்னியாகுமரி: டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தண்டவாளம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.

இதே போன்று ரயில் பெட்டிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜ கோயில், உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சுற்றுலா மையமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.. களைகட்டிய கன்னியாகுமரி கடற்கரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.