கன்னியாகுமரி: மத்திய அரசு அனைத்து தொழில்கள் மீது திணிக்கப்பட்ட தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டியும், தமிழக அரசும் பல சட்டங்களை பாதுக்காக்க வலியுறுத்தியும் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை காந்தி மண்டபம் வரை விழிப்புணர்வு பயணம் நேற்று தொடங்கியது.
மத்திய அரசால் நாடு முழுவதும் அனைத்து தொழில்கள் மீது புதிய சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த தொகுப்பு சட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருவதால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டுமெனவும், மாநில சட்டங்களிலும் தமிழக அரசு சில சட்டங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் முன்பு இருந்து விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கினார்கள்.
மேலும், தமிழகத்தின் 32 மாவட்டங்கள் வழியாக வரும் 30ஆம் தேதி சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் பயணத்தை நிறைவு செய்து கோரிக்கையை முதலமைச்சரிடம் கொடுக்க இருப்பதாக இந்த பயணக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்கள்: ஒரே நாளில் போடப்பட்ட தார் சாலை - மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு