கன்னியாகுமரி: கண்டவிளை பகுதியை சேர்ந்த மாணவர் ஆஷிக். இவர் நெய்யூர் சிஎஸ்ஐ போலியோ ஹோமில் தங்கி பயின்று வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவர் நடப்பதற்கு வேண்டி காலில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.
மேலும் இவர் பூரண குணம் அடைந்து முழுமையாக நடப்பதற்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட அந்த மாணவனின் உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்த தகவல் குளச்சல் ஏ எஸ் பி விஸ்வேஸ் சாஸ்திரிக்கு கிடைத்தது.
அந்த மாணவனின் ஏழ்மை நிலையை அறிந்த குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி அந்த மாணவனை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை தனது சொந்த செலவில் தருவதாக கூறினார்.
இதனால் மாணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவனின் அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரத்தை மாணவனின் பாட்டியிடம் ஏஎஸ்பி வழங்கினார்.
இதையும் படிங்க: கொலை செய்து குளத்தில் புதைக்கப்பட்ட இரு தலித் சிறுமிகள் சடலம் மீட்பு!