கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பிரசாந்த் மு. வடநேரே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இணை இயக்குனராக சமீபத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, மாநில நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றிய அரவிந்த் கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று, கன்னியாகுமரியின் 51ஆவது மாவட்ட ஆட்சியராக அரவிந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்