கன்னியாகுமரி வேங்கை சிட்டோ ரியூ கராத்தே சங்கம், நாகர்கோவில் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டி கன்னியாகுமரி பெரியார்நகர் சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு ஆசிய கராத்தே நடுவர் கே.கே.ஹெச். ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளைத் தொடங்கிவைத்தார். இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியின் இறுதியில் ஆந்திர மாநில அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை தமிழ்நாடு கராத்தே சங்க பொதுச்செயலாளர் ஈஸ்வர்குமார், ஆந்திரப் பிரதேச கராத்தே பயிற்சியாளர் வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்டோர் வழங்கினர்.
இதையும் படிங்க: வங்கதேசத்துக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!