ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரி அமமுக வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து ரயில் மூலமாக நாகர்கோவில்வந்தடைந்தார். அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரயில் நிலையத்தில் லட்சுமணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் மீனவர்களின் நலனுக்காக பாடுபடுவோம். பல ஆண்டுகளாக அவர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கையான ஹெலிகாப்டர் தளத்தை வெற்றி பெற்ற 90 நாட்களுக்குள் அமைக்கப்படும். மீனவர்கள் மற்றும் பொது மக்களை பாதிக்கின்ற துறைமுகத் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் குமரியில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார்.
தேசிய கட்சிகள் மதங்களை நம்பி உள்ளன. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதங்களை நம்பாமல் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்தார்.