கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலால் தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், மாற்று திறனாளிகள் பணிக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் குமரி மாவட்ட ரெட் கிராஸ், யூத் ரெட் கிராஸ் அமைப்பிற்கு 80 உணவு தொகுப்பினை வழங்கியது. குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கபட்டது. இதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கும் இன்று (ஜூன் 9) நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அத்தியாவசிய பொருள்களான அரிசி, பருப்பு, சீனி, மசாலா, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருள்கள் அடங்கிய 700 ரூபாய் மதிப்புள்ள உணவு தொகுப்புகள் 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிநீர் கிணற்றை சுத்தம் செய்த கிராம மக்கள்!