கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுகச் செயலாளராக இருந்து வருபவர் எஸ்.ஏ. அசோகன். இவர் குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். அண்மைக் காலமாக இவர் தொண்டர்களை மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தொண்டர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் தன்னைப்பற்றி வந்த தவறான தகவலுக்குக் காரணம் அதிமுக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முத்துகுமார் என நினைத்த அசோகன் ஃபோனிலும், நேரிலும் முத்துகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முத்துகுமார் பூதப்பாண்டி காவல் நிலையத்திலும் நாகர்கோவிலில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார்.
இதற்கிடையில், அவரது மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், இது குறித்து தொண்டர்கள் தலைமைக்குத் தகவல் கொடுத்தும், முறையான நடவடிக்கை இல்லை எனத் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி? - அமைச்சர் கே.சி. வீரமணி உளறல்!