கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக அக்கிரமிப்புக்கள் அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். இதில் பாரபட்சம் பார்த்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன.
அந்தவகையில் கன்னியாகுமரி அடுத்த நாகர்கோவில் அருகே உள்ள செம்மாங்குளத்தில் கரையோரமாக ஏராளமான ஏழை எளிய மக்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அங்கு வந்த பொது பணித்துறை அதிகாரிகள் ஜெசிபி இயந்திரங்கள் உதவியுடன் குருவிக் கூட்டைக் கலைப்பது போல் விடுகளை இடித்து அகற்றினார்கள். இவ்வாறு ஏழை, எளிய மக்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
நகரப் பகுதிகளில் ஒரு மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு பல மாடி கட்டிடங்கள் கட்டிய முதலாளிகள் பக்கமே அதிகாரிகள் போகாமல் ஏழை மக்களின் வீடுகளை இடிப்பது மட்டும் எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க...பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்