ETV Bharat / state

Kanyakumari Dog Show: 300-க்கும் மேற்பட்ட நாய்கள்..களைகட்டிய குமரி நாய்கள் கண்காட்சி!

author img

By

Published : Jul 17, 2023, 6:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அகில இந்திய நாய் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்க டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து விமானம் மூலம் நாய்கள் வந்தன.

அகில இந்திய நாய்கள் கண்காட்சி
அகில இந்திய நாய்கள் கண்காட்சி
அகில இந்திய நாய்கள் கண்காட்சி

கன்னியாகுமரி: கென்னல் கிளப் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவிலான நாய் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று (ஜூலை 17) நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் 19 மற்றும் 20வது ஆண்டிற்கான அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

மக்கள் தங்களது வீடுகளில் பல்வேறு வகையான நாய், பூனை, எலி, மைனா மற்றும் பல்வேறு வகையான உயிரினங்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இப்படி வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான செல்லப்பிராணிகளை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும், இதைப்போன்ற கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக செல்லப் பிராணிகளின் கண்காட்சி மற்றும் போட்டிகளை கன்னியாகுமரி கென்னல் கிளப் நடத்தி வருகின்றனர். இந்தப் போட்டியில் பல்வேறு நாய் வகைகளையும், அதன் உடலமைப்பு, செயல் திறன் மற்றும் நாயின் மனோபாவங்களை அறிந்து கொள்ள கண்காட்சி தளத்தில் பல நாய்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட வகை நாய்களுக்கு உரிய பண்புகள், அடையாளங்கள் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் நாய்கள் வெற்றி பெற்றதாகத் தேர்வு செய்யப்பட்டு, அவைகளுக்கு பரிசுகளும் வழங்கபட்டன. இந்த நாய் கண்காட்சியில், நாயின் வகை, அதன் அடையாளங்களில் சிறந்து விளங்குவதற்கான போட்டி மற்றும் நாயின் கீழ்ப்படிதல் குணத்துக்கான போட்டி என இருவகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் வெளிநாட்டு நாய் இணங்கலான லேப்ராடர், பிஹில்ஸ், ஜெர்மன் ஷெப்பர்ட், ஹஸ்கிஸ், ஷிஜுஸ், வகை நாய்களும்; நாட்டு நாய் இணங்களான கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி, கேரவன், ராஜபாளையம், போன்ற 45 வகைகளின், 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

நாய்களின் கீழ்படியும் தன்மை, அதன் தரத்திற்கேற்ற செயல்பாடுகள், பழகும் தன்மை போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தேர்வு நடந்தது. மேலும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை, கோலாப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் நாய்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த போட்டியில் சிறந்த செயல்பாடுகள் கொண்ட எட்டு நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட நாய்கள் அனைத்திற்கும் திருமண மணப்பெண்ணை தயார் செய்வது போல அழகு நிலைய ஊழியர்கள் நாய்களை அழகுபடுத்தினர். இந்த அலங்காரம் படுத்திய நாய்கள், கண்காட்சியை காண வந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: வால்பாறையில் உலா வரும் சிறுத்தை வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.