ETV Bharat / state

ஏய் தள்ளு.. தள்ளு.. தள்ளு.. நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய மாணவிகள்! - Kanyakumari news

நாகர்கோவிலில் அரசு பேருந்து திடீரென பழுதானதைத் தொடர்ந்து, பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் பழுதான பேருந்தை தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பழுதடைந்த அரசு பேருந்தை தள்ளிச் சென்ற மாணவிகள் விடியோ வைரல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 12:49 PM IST

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய மாணவிகள்!

கன்னியாகுமரி: நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள் நகர், திருவட்டார், படந்தாலுமூடு, மார்த்தாண்டம் என மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் அரசு பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அண்மைக் காலமாகவே, சாதாரண மழை பெய்தால் கூட பேருந்துகளில் குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய அளவில் தான் அரசு பேருந்துகளின் தரம் உள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து இருக்கை உடைந்து விழுந்து, சில தொடர் விபத்துகளும் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமன்றி, பேருந்துகள் அடிக்கடி ப்ரேக் (Break) பிடிக்காமல் விபத்து ஏற்படுவதும், டயர் பஞ்சராகி வழியில் நிற்பதும், செல்ப் மோட்டர் இல்லாமல் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்வதும் அடிக்கடி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இப்படி நடப்பதால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் தரம் குறைவானதாக உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident : 30 நிமிடத்திற்கு பின் வந்த தீயணைப்பு வாகனம்.. ரயில்வே அளித்த விளக்கம் இதுதான்!

இந்த புகார்களை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில், நாகர்கோவில் அருகில் குருசடி பகுதியில் உள்ள கல்லூரிக்கு மகளிர் மட்டும் பயணம் செய்யும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் கல்லூரி மாணவிகள் அதிகமானோர் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் மகளிர் மட்டும் பயணம் செய்யும் அந்த அரசு பேருந்து, கோட்டாறு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பழுதாகி வழியிலேயே நின்றுள்ளது.

இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி பழுதான அந்த பேருந்தை தள்ளிச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, மாணவிகளின் இந்த செயல் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதையடுத்து, மாணவிகள் பேருந்தை தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க: Madurai Train Fire : சுற்றுலா ரயிலில் திடீர் தீ விபத்து... 8 பயணிகள் பலி! கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.