ETV Bharat / state

தேவாலய வாசலில் காதல் ஜோடி திருமணம் - தேவாலய வாசலில் காதல் ஜோடி திருமணம்

கன்னியாகுமரி: 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தேவாலய வாசலில் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

lovers marriage
lovers marriage
author img

By

Published : Apr 7, 2020, 10:31 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (28). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இருவரின் காதல் குறித்து அவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. பெற்றோர்களும் வழக்கம்போல் இருவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாகர்கோவிலை அடுத்த கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கு திருமணம் செய்து கொள்வதற்காக வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தேவாலயம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, காதல் ஜோடி தேவாலய வாசலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களது நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனாவிற்கு எதிராய் கருணைக் காட்ட கடவுளை அழைத்த காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.