ETV Bharat / state

உலக இரும்பு மனிதன் போட்டி - குமரியைச் சேர்ந்த சாதனையாளர் தீவிரப் பயிற்சி

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள உலக இரும்பு மனிதன் போட்டிக்குத் தேர்வான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சாதனையாளர் கண்ணன் போட்டியில் வெற்றிபெற தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Etv Bharat கடும் பயிற்சியில் கண்ணன்
Etv Bharat கடும் பயிற்சியில் கண்ணன்
author img

By

Published : Feb 12, 2023, 8:20 PM IST

கடும் பயிற்சியில் கண்ணன்

குமரி: உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனைப் படைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டியானது முதல்முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சார்ந்த கண்ணன் என்பவர் தேர்வாகியுள்ளார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், இந்திய அளவில் பல்வேறு ஸ்ட்ராங் மேன் சாதனைகள் புரிந்துள்ளார். ஏற்கனவே , 13.5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் இழுத்து தேசிய அளவில் சாதனைப் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூக்கி நடந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது பஞ்சாபில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க அவர் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த போட்டிகள், லாக் பிரஸ், யோக் வாக், டயர் பிலிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது. இதற்காக தினமும் சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தீவிர உடற்பயிற்சி மற்றும் பளு தூக்கும் பயிற்சியில் கண்ணன் ஈடுபட்டு வருகிறார். சாதாரணமாக இந்தப் பயிற்சிகளை யாரும் செய்ய முடியாத நிலையில் கடினமாக இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து பேசிய கண்ணன், “உலகளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்று சாதனை படைப்பேன். என்னை போலவே பல வீரர்களை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். இந்தப் போட்டியை இளைஞர்களிடம் பிரபலப்படுத்த பாடுபடுவேன். தமிழ்நாடு அரசு இப்படிபட்ட போட்டிகளில் பங்குபெறும் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருந்து முதன்முதலாக இவ்வகை போட்டியில் பங்கேற்கும் கண்ணன், முதல் பங்கேற்பிலேயே முதலிடத்தை பெறுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இரவு பகலாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு, உணவு பழக்கங்களிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, சர்வதேச வீரர்களோடு மோதுவதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

இவரது பயிற்சி தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி, இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மேலும், இரும்பு மனிதன் போட்டியில் தென்னிந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் ஒரே வீரர் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி சாதனைப் படைத்த 'குமரி ஸ்ட்ராங் மேன்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.