ETV Bharat / state

மனைவியும், மகனும் தான் தன் தற்கொலைக்குக் காரணம்: கணவர் விஷம் குடித்துத் தற்கொலை! - குற்றச் செய்திகள்

கன்னியாகுமரி: சுசீந்திரம் பகுதியில் மனைவியும், மகனும் தான் தன் தற்கொலைக்குக் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

கணவர் விஷம் குடித்துத் தற்கொலை
கணவர் விஷம் குடித்துத் தற்கொலை
author img

By

Published : Apr 14, 2021, 9:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகாந்த் (44). இவர் தோவாளை புதூர் பகுதியைச் சேர்ந்த சரிதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் முரளிகாந்த் வெளிநாட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்ததில் இருந்தே முரளிகாந்த், அவரது மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே சரிதாவும் அவர் மகன் அபிஷேக் இருவரும் சேர்ந்து முரளிகாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த முரளிகாந்த் அவமானம் அடைந்து தனது வீட்டில் வைத்திருந்த விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தன் மனைவி, மகனின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுசீந்திரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியுடன் இருக்கும் முரளிகாந்த்
மனைவியுடன் இருக்கும் முரளிகாந்த்

மேலும், முரளிகாந்த் தற்கொலைக்குக் காரணமான சரிதா மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முரளிகாந்த் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சரிதா, அவரது மகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்தகராறு காரணமாக மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.