கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள இரணியல் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் நெருங்கி வந்து நின்று பேசுவதும், ஆபாசமான கருத்துகளை தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அறிந்த பெற்றோர்கள் நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியர் மீது புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து ”வணிகவியல் ஆசிரியர் கிறிஸ்துதாஸ்” மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்கொடுமை... போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது