ETV Bharat / state

குமரியில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் - Kanyakumari District Collector

கன்னியாகுமரி : நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

50 percent Subsidy for set up a hen farm in  at Kumari

author img

By

Published : Nov 14, 2020, 2:37 PM IST

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குமரி மாவட்டத்தில் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 விழுக்காடு மானியம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 45 அலகுகள் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பயன்பெற விரும்பும் பஞ்சாயத்துகளில் வசிக்கும் தொழில் முனைவோர், ஆயிரம் நாட்டுக்கோழிகளை 2,500 சதுர அடியில் தங்க வைக்கும் வசதி உடைய இடம்கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகளுக்கு விலையில் 50 விழுக்காடு, கோழி தீவனத்திற்கான விலையில் 50 விழுக்காடு, குஞ்சு பொரிப்பு கருவிக்கான விலையில் 50 விழுக்காடு என மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் 30 விழுக்காடு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் பயனாளி 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற்றவராக இருத்தல் கூடாது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

இதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள், தங்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.