ETV Bharat / state

'குளத்தை நம்பியுள்ள 50 ஏக்கர் நெல் விவசாயமும் நடக்கல; நல்ல குடிநீரும் கிடைக்கல' - குடிநீரும் கிடைக்கல

நாகர்கோவில் அருகே பீமநகரி ஊராட்சியில் அகஸ்தியர் குளத்தைப் பல ஆண்டுகளாக தூர்வாராமல்விட்டதால் குளத்தில் தண்ணீர் தெரியாத அளவிற்குப் பாசியும், புல் புதர்களும் வளர்ந்துள்ளது. இந்த குளத்தை நம்பி உள்ள விவசாயிகளும், குடிநீருக்காக கிராம மக்களும் பயன்படுத்தமுடியாமல் தவித்து வருகின்றனர்.

குளத்தை நம்பியுள்ள 50 ஏக்கர் நெல் விவசாயமும் நடக்கலை; நல்ல குடிநீரும் கிடைக்கல

author img

By

Published : Jul 27, 2022, 7:44 PM IST

கன்னியாகுமரி: பாசனக் குளங்களை அரசு முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால் நெல் விவசாயம் பல கிராமங்களில் முடங்கியுள்ளது. நாகர்கோவில் அருகே பீமநகரி ஊராட்சியில் அகஸ்தியர் குளத்தைப் பல ஆண்டுகளாக தூர் வாராமல் விட்டதால் குளத்தில் தண்ணீர் தெரியாத அளவிற்குப் பாசியும், புல் புதர்களும் வளர்ந்துள்ளன. இதனால் இந்த குளத்தை நம்பி இருந்த கிராம மக்களும், விவசாயிகளும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர்.

தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் விவசாயத்தில் முன்னணி மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டாண்டு காலமாகத் திகழ்ந்து வருகிறது. இயற்கையாகவே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், ஆறுகள், கால்வாய்கள், அணைகள் என நீர்நிலை ஆதாரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் என்பதால் விவசாயமும் முன்னணித் தொழிலாக நடந்து வந்தது.

ஆறுகள், குளங்கள் ஒவ்வொரு கோடைகாலத்திலும் வேளாண்மைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரால் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், பல ஆண்டுகளாக மாவட்டத்தில் பல குளங்களை அரசு தூர்வாரவோ, சீரமைப்புப் பணிகளை செய்யாததால் அந்த குளத்தை நம்பி இருந்த பாசன நிலங்களில் விவசாயம் முடங்கி உள்ளது.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீமநகரி ஊராட்சியில் உள்ள அகஸ்தியர் குளத்தை நம்பி 50 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்த குளத்தின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கும் நீர் தான் சுமார் 150 குடும்பங்களுக்கு குடிநீராகப் பயன்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக அரசு தரப்பில் இந்த குளங்களைத் தூர்வாரும் பணிகளும் செய்யாததால், குளத்தில் தண்ணீரே தெரியாத அளவுக்கு பாசிகள், புல், புதர்கள் வளர்ந்து, மதகுகளில் இருந்து தண்ணீர் வெளிவராத அளவிற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது.

'குளத்தை நம்பியுள்ள 50 ஏக்கர் நெல் விவசாயமும் நடக்கவில்லை; நல்ல குடிநீரும் கிடைக்கவில்லை’

மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்டத்திற்கு அண்மையில் ஆய்வுக்கு வந்த சட்டப்பேரவை குழுவிடம் கூட கோரிக்கை வைத்தும் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பீமநகரி ஊராட்சித் தலைவி சஜிதா தலைமையில் ஊர் சார்பில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் குளம் தூர்வாரும் பணிகளை இன்று தொடங்கினார்கள். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்; தற்காலிகப்பாலம் அமைக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.