கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா, புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்களை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், மாநகர் முழுவதும் 30 குழுக்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 பேர், இதர குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 32 பேர் என மொத்தம் 49 பேரை கைது செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் இந்த சோதனை தொடர்ந்து வருகிறது.