ETV Bharat / state

தோள் சீலைப் போராட்டம் மாநாட்டில் பினராயி விஜயன் வைத்த ட்விஸ்ட்... ஸ்டாலினுக்கு கோரிக்கை!

author img

By

Published : Mar 7, 2023, 8:57 AM IST

Updated : Mar 7, 2023, 9:30 AM IST

உடைக்க முடியாத பா.ஜ.க-வின் வாதம் உடைவதைக் காண முடிவதாகவும், பீகாரில் அக்கட்சிக்கு எதிராக மாபெரும் மாற்றம் நிகழும் என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நடத்த உள்ள மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரளா முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நாகராஜா திடலில் நடந்த தோள்சீலை போராட்டம் 200 வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ மீதுள்ள நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும், மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், அதிகம் என்றும் இவை அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேற்று (மார்ச்.6) 'தோள் சீலை போராட்டம்' 200வது ஆண்டு நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் மாநாட்டில் பங்கேற்று நிகழ்ச்சி மேடையில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "கேரளத்தில் மார் மறைக்கும் சமரமும், தமிழ்நாட்டின் தோள் சீலைப் போராட்டமும் ஒன்றுதான் எனவும், விலக்கி தடுக்கப்பட்ட பெரிய அளவிலான மக்கள் நம் நாட்டில் உண்டு எனவும் கூறினார்.

சனாதன தர்மத்தின் கொடூரங்கள்: நிறைய சமூகத்தில் பெண்களுக்கு மார்பை மறைக்க முடியாத நிலை முன்பு இருந்தது எனவும் இதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தான் 'மார் மறைக்கல் சமரம்' எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், '2 நூற்றாண்டுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, திருவிதாங்கூர் இனி 'சனாதன தர்ம அரசு'-ஆக இருக்கும் என அறிவித்தப் பின், அங்கு சனாதன தர்மத்தின் பெயரில் பல கொடூரங்கள் நடந்தன.

சங் பரிவாருக்கு 'ஜனநாயகம்' அலர்ஜி: மனிதனுக்கு எதிரான செயல்பாடுகள், வரிகள் மக்களிடம் திணிக்கப்பட்டன. மனித உடல் பாகத்துக்கு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டது மிகவும் மோசமானது. பெண்கள் மார்பு மறைக்கக்கூடாது என சட்டம் கொண்டு வந்தார்கள். 'சனாதன தர்மத்தின் நாடு' என்று அறிவித்த மார்த்தாண்ட வர்மா செய்ததைப் பற்றி சொன்னார்கள். இதை சனாதன தர்மம் என்ற பெயரில் சங் பரிவார் பழைய மன்னராட்சியை கொண்டு வரப் பார்க்கிறது. 'ஜனநாயகம்' என்பது இவர்களுக்கு அலர்ஜி.

ஆட்டம் காணும் பா.ஜ.க: உடைக்க முடியாத சக்தி என்பது பா.ஜ.க-வின் வாதம், தேசிய அரசியலில் அவை உடைவதை இன்று காண முடிகிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக பீகாரில் நிதிஷ்குமார் கட்சி நிற்கிறது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பா.ஜ.க-வின் மக்கள் விரோத போக்கால் ஹரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின.

தேர்தல்களில் பா.ஜ.க. பின்னடைவு: வருகிற 2024-ல் பா.ஜ.க-வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற கோஷம் அதில் உயர்ந்தது. சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பா.ஜ.க உடன் உள்ளது. மகராஷ்டிரா உள்ளிட்ட இடைத்தேர்தலில்களில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டெல்லி மாநகராட்சி பா.ஜ.க-வின் கையைவிட்டு போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்துவரும் அரசியலின் சரியான அறிகுறிகள். ஆகவே, பா.ஜ.க-வின் துன்பத்தை மக்கள் அறிந்து கொள்கிறார்கள்.

50%-லிருந்து 10% ஆன ஓட்டுகள்: அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங் பரிவார் பிரிவினை அஜண்டாவை புகுத்துகிறார்கள். காசியும், மதுராவும் அடுத்ததாகப் பிடித்து எடுக்கலாம் எனக் கூறுகிறார்கள். பசியும் அதனால் ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டுகொள்ளாமல் சங் பரிவார் உள்ளது. திரிபுராவில் பா.ஜ.க வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவீதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு இந்த முறை 10 சதவீதம் ஓட்டு குறைந்துள்ளது. சில கட்சிகள் ஓட்டு பிரிக்காமல் இருந்தால் அங்கு வேறு மாதிரி ஆகியிருக்கும்.

சிபிஐ மீதான நம்பிக்கை போனது: ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள். தி.மு.க மொழி பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. இந்தி திணிப்புக்காக அவர்கள் முயல்கிறார்கள். மத்திய ஏஜென்சிகள் மூலம் அரசியல் செய்வது நமக்கு தெரிகிறது. அதை இன்னும் அதிகரிக்கப் பார்க்கிறார்கள். பெரும் முதலாளித்துவ அரசியல் செய்கிறார்கள். எல்.ஐ.சி-யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கியுள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், சி.பி.ஐ மீதுள்ள நம்பிக்கை தகர்ந்துள்ளது.

மாநாட்டில் ட்விஸ்ட் வைத்த பினராயி: இந்துத்துவ தந்திரம் ஆபத்தை உண்டாக்கும். மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம் உள்ளன. அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். பா.ஜ.க-வை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமை நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு அழைப்பை கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட்டத்தின் 100ஆம் ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தப்போகிறோம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரவேண்டும் என அழைக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

இதன் மூலம், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக பீகார், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளதையும், அதன் விளைவாகவே அங்கு பா.ஜ.க-வின் ஆதிக்கம் குறைந்து வருவதாகவும், அக்கட்சிக்கு எதிராக பேரணிகள் நடந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, திரிபுராவில் 50 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக பா.ஜ.க-வின் ஓட்டுகள் குறைந்ததாக தெரிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டு விழா: தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க-வை எதிர்க்கும் பணியில் அனைவரும் ஓரணியில் இருந்து செயல்பட்டால், நாட்டில் மக்களின் உரிமையையும் நாட்டின் எதிர்காலத்தையும் நாமே தீர்மானிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, 200வது ஆண்டு நிறைவை எட்டிய தோள் சீலைப் போராட்டத்தைப் போல, நூறாவது ஆண்டை எட்ட உள்ள வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவையும் கேரளா அரசு நடத்தப் போவதாகவும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நிகழ்ச்சி மேடையில் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் இந்துத்துவத்தின் அடிப்படையாக உள்ள பார்ப்பனியத்திற்கு எதிராக நடந்த வரலாற்றில் திரும்பிப் பார்க்க வைத்த இந்த தோள் சீலைப் போராட்டத்தின் 200வது நிறைவு ஆண்டு விழா, வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டு விழா மாநாடு ஆகியவற்றின் மூலம் பா.ஜ.க-விற்கு எதிரான நிலைப்பாட்டில் மாறாமல் இணைந்தே பயணிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: பொய்யான வீடியோவால் பீகார் தொழிலாளர்கள் பீதி: அதிகாரிகள் குழு பேட்டி

Last Updated : Mar 7, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.