கன்னியாகுமரி: குலசேகரம் பகுதியில் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் செல்வதற்கான கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் பொதுமக்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்து கொண்டிருந்தது. பாம்பைக் கண்டதும் அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
இருப்பினும், தூரமாய் நின்று பாம்பை பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு, பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்தார்.
தைரியமாக கால்வாயில் இறங்கி மலைப்பாம்பை பிடித்த அந்த இளைஞரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பின்னர் பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
இதையும் படிங்க: குமரி அருகே மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு!