ETV Bharat / state

செங்கல்பட்டில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! - Police investigation begins

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young lady hacked-to-death
author img

By

Published : Sep 6, 2019, 12:58 PM IST

செங்கல்பட்டு அடுத்த காவித்தண்டலம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயவேல்-கோமதி தம்பதி. இவர்கள் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கோமதி மாலை தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தாமதமாக அவரது கணவர் ஜெயவேலு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கோமதி வீட்டில் இல்லாததால் பல இடங்களிலும் தேடியுள்ளார்.

இந்த நிலையில், அங்குள்ள ஏரிக்கரை கால்வாய்ப் புதரில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜெயவேலு சென்று பார்த்தபோது அவரது மனைவி கோமதி கழுத்துப்பகுதியில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இளம் பெண் கழுத்தறுத்து கொலை

கோமதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இந்த கொலை நடந்துள்ளதால், நகை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro:
செங்கல்பட்டு அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கால்வாயில் பிணமாக மீட்பு.... நகைக்காகவா அல்லது பாலியல் தொல்லையால் கொலை நடத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் சாலவாக்கம் போலீசார் விசாரணைBody:செங்கல்பட்டு அடுத்த காவித் தண்டலம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல் இவர் இவரது மனைவி கோமதி உடன் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்..

இந்நிலையில் இன்று மரம் வெட்ட சென்ற பின் மாலை தனியாக வீடு திரும்பிய கோமதி வீட்டில் இல்லாததால் அவரது கணவர் ஜெயவேலு பல இடங்களில் தேடி உள்ளார்.. அப்போது ஏரிக்கரை கால்வாய் புதரில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் ஜெயவேலு சென்று பார்க்கையில் அவரது மனைவி கோமதி இரண்டு இடங்களில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக அருகில் உள்ள கால்வாய் புதரிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சாலவாக்கம் காவல் துறையால் அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வீடு திரும்புகையில் நகைக்காக அவரை கொலை செய்தார்களா அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உடன்படாத கொலை செய்தார்களா அல்லது கற்பழிப்பு நடந்தபின் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:இதுகுறித்து பிரேத பரிசோதனைக்கு பின் விசாரணைகளில் தெரிய வரும் என சாலவாக்கம் காவல்துறையினர் தெரிவித்தனர்.. இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.