ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாள்களுக்கும் மேலாக, இந்தியாவில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு மதுபான கிடங்கின் கீழ், செயல்படும் 108 அரசு மதுபான கடைகளில், 58 அரசு மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன.
இதனையடுத்து அரசு மதுபான கடைகளில் விற்பனைக்காக இருப்பு வைக்கத் தேவையான மதுபானங்கள் அடங்கிய பெட்டிகளை, காஞ்சிபுரம் கிடங்கிலிருந்து, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூ விவசாயிகள்!