காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் உத்திரமேரூர் அமமுக வேட்பாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, "நீங்கள் என்னை வருகின்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். உங்களது பிள்ளையாய் தோளோடு தோள்கொடுப்பேன். இதுவரையில் நீங்கள் பாத்திராத சட்டப்பேரவை உறுப்பினராக நான் நடப்பேன். எனது ஊதியத்தையும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவிற்கே கொடுப்பேன்.
எனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியினை தரமான சாலைகள், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் என அனைத்தையும் மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுக்கின்ற வகையில் செலவிடுவேன்" என வாக்குறுதி அளித்தார்.
முன்னதாக, ஓரிக்கை பகுதியில் வாக்குச் சேகரிக்கவந்த அவருக்கு காஞ்சிபுரம் நகர அமமுக சார்பில் பெண்கள் ஆரத்தி எடுத்து ரோஜாப்பூ தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயில் ஒன்றில் சாமி தரிசனம்மேற்கொண்டார்.