ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - kancheepuram admk opened thanneer pandhal

காஞ்சிபுரம்: கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்களின் குடிநீர் தாகத்தைப் போக்க மாவட்ட நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
author img

By

Published : Apr 10, 2021, 6:03 PM IST

காஞ்சிபுரம் நகர அதிமுக சார்பில், காஞ்சிபுரம் - காந்தி ரோடு தேரடிப் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தாகத்தைப் போக்கும் வகையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று (ஏப்.10) நடைபெற்றது.

இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் குடிநீர், இளநீர், தர்பூசணி வெள்ளரி, பழங்கள், பழ ரசங்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
மேலும், கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி கபசுர குடிநீரினை வழங்கினார்.
இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், நகரச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

’ஜெ வழியில் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமையுங்கள்’ - கட்சியினருக்கு டிடிவி அன்பு வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.