ETV Bharat / state

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற விளக்கொளிப் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 30, 2022, 7:59 AM IST

Updated : Nov 30, 2022, 8:21 AM IST

காஞ்சிபுரம் : பிரசித்திபெற்ற விளக்கொளிப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும், பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவிலிருந்து உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடனும்,மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது.

விளக்கொளிப் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

இதனைத்தொடர்ந்து உற்சவர் வேதாந்த தேசிகருடன் பெருமாளும்,தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர். பின்னர் திருக்குளத்தில் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு,வாண வேடிக்கைகளுடன் தெப்ப குளத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ம் வாண வேடிக்கை நிகழ்ச்சியையும் அவர்கள் கண்டு ரசித்தனர். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் திருக்குளத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்விழாவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி,நிர்வாக அறங்காவலர் தியாகராஜன், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, ஸ்ரீதரன் மற்றும் வழக்கறிஞர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி திருக்கோயிலும்,திருக்குளமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா... சாமி ஊர்வலம்

Last Updated : Nov 30, 2022, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.