செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பச்சையம்மன் கோவில் பகுதியிலுள்ள அம்பேத்கர் நூற்றாண்டு நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு மாவட்டமாக அறிவித்து பலவித நலத்திட்டங்களை வழங்கி வருவது மகிழ்ச்சியளித்தாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அம்பேத்கர் நூற்றாண்டு நகரில் வசிக்கும் மக்களை அகற்றும் நடவடிக்கையை நகராட்சி எடுத்து வருவது வேதனையளிக்கிறது.
மக்கள் வசிக்கும் இடத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவிருக்கும் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர்.
தமிழ்நாடு அரசு, அப்பகுதி மக்களை வெளியேற்றி அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நோக்கத்தை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அம்பேத்கர் நூற்றாண்டு நகரில் வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கை நிலையை எண்ணி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க : கோத்தபய ராஜபக்ச நம் நாட்டில் கால் பதிக்கக் கூடாது - விசிக ஆர்ப்பாட்டம்!