ETV Bharat / state

இரண்டு வயது குழந்தை குடிநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு - 2 years child died

காஞ்சிபுரம் அருகே இரண்டு வயது குழந்தை குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

காஞ்சிபுரம் அருகே 2 வயதுக் குழந்தை குடிநீர் தொட்டியில் மூழ்கி பலி

author img

By

Published : Apr 20, 2021, 12:45 AM IST

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன் குளம் என்ற பகுதியில் ராஜேஷ். இவர் பால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெஸ்ஸிதா(7) என்கிற மகள் உள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 19) வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜெஸ்ஸிதாவை காணவில்லை. அலறியடித்த பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர், வீட்டின் அருகே குடிநீர் பிடிக்கும் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜெஸ்ஸிதா ஏற்கனவே இறந்த விட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் - ட்ரெண்ட் ஆகும் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.