காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் மகேஷ் குமார் போட்டியிடுகிறார். இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதை யொட்டி அவர் தனது இறுதி கட்ட பரப்புரையாக, இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பாமக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனத்தில் நின்றபடி பாமக வேட்பாளர் மகேஷ்குமார், பெரியார் நகர் பகுதியில் தொடங்கி செட்டி தெரு, ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரணி சென்றார்.
தொடர்ந்து, அவர் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடிப்பகுதியில் பகுதியில் அதிமுக சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளையும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க:இரவில் விசைத்தறி ஓட்டும் பணி; பகலில் தோழர்களுடன் பரப்புரை - இப்படி ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர்!