ரஜினி மக்கள் மன்றத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்பட்டதால் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் ராஜமூர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலகண்ணன்சிவ ஆகியோர் மன்ற பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி மன்றத்தை மேம்படுத்தாமல், மன்றத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் ராஜமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலகண்ணன் ஆகியோர் மன்ற பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர்.
மேலும் குறிப்பிட்டுள்ள இருவரும் எவ்வித மன்ற பணிகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், இனி வரும் காலங்களில் இவர்களது நடவடிக்கைகளை மாநில தலைமை கூர்ந்து கவனித்து, அவர்களது செயல்பாட்டினை கருத்தில் கொண்டு மீண்டும் பொறுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் மக்கள் மன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேற்கண்ட இருவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.