காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (23) மற்றும் சுரேந்தர் (20) ஆகிய இருவரும், மணிமங்கலம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (21), விக்னேஸ்வரன் (19), டில்லி பாபு (21) மற்றும் புஷ்பராஜ் (19) ஆகியோர் அடங்கிய கும்பலால் இருவரையும் வெட்டி கொலை செய்தனர்.
பின்னர் நான்கு பேரும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த கொலையை செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...