ETV Bharat / state

காஞ்சிபுரம் நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அமைச்சர் பா.பெஞ்சமின் மரியாதை - tn Minister Benjamin

காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
author img

By

Published : Feb 3, 2021, 9:20 AM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்.03) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை யொட்டி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோவில் பேரணியாக வந்து பெரு நகராட்சியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் சிலைக்கு அமைச்சர் பா.பெஞ்சமின் மரியாதை

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் குறித்து குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்விகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.