ETV Bharat / state

தேர்தல் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் - kanchipuram

காஞ்சிபுரம்: மக்களவைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேர்தல் விழப்புணர்வு
author img

By

Published : Apr 6, 2019, 12:19 PM IST

17வது மக்களவைத்தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களுக்கு நுகர்பொருட்கள் கொண்டும், ராட்சத பலூன், நடன நிகழ்ச்சி என பல்வேறு வகையிலும் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குச்சாவடி மையம் செயல்பட தொடங்கியுள்ளது. இதில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுபாட்டு இயந்திரம், வாக்களித்த உறுதி செய்யும் வி.வி.பாட் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வண்ணம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தினை மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று ஆய்வு செய்தார். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மாதிரி வாக்கு சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வாக்காளர்களுக்கு அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊராட்சி முகமை இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்

.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சத வாக்குப்பதிவின் உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா பொன்னையா ஆய்வு செய்தார்..

17 வது மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்களுக்கு நுகர்பொருட்கள் மீதும் , ராட்சத பலூன் , நடன நிகழ்ச்சி என பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குச்சாவடி மையம் செயல்பட துவங்கியுள்ளது இதில் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பை போல் வாக்குச்சாவடி அலுவலர் , துணை அலுவலர் வாக்குப்பதிவு எந்திரம் கட்டுபாட்டு இயந்திரம் மற்றும் வாக்களித்த உறுதி செய்யும் VVPAT இயந்திரம் உள்ளிட்ட அனைத்தும் வாக்குசாவடி அலுவலர்கள் கொண்டு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வண்ணம் இன்று முதல் துவங்கியுள்ளது.. இந்த மையத்தினை மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று ஆய்வு செய்தார்..மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மாதிரி வாக்கு சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வாக்காளர்களுக்கு அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி மாவட்ட ஊராட்சி முகமை இயக்குனர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நாராயணன் , மகளிர் திட்ட அலுவலர் எழில் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Visual in ftp 
TN_KPM_1_6_MODEL POLLING ELECT_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.